மேற்கு வங்காளம் காவி வளர்ந்த கதை

 மேற்கு வங்காளம் காவி வளர்ந்த கதை  

மேற்கு வங்கம் - இந்த மாநிலம் பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்ட மாநிலம். 

கணவனை இழந்த பெண்கள் "உடன் கட்டை" ஏறும் வழக்கத்தை எதிர்த்துப் போராடி அதை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜாராம் மோகன் ராய்; தன்னுடைய "ஆனந்த மடம்" என்ற நாவலின் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தீக்கனலை மூட்டிய பங்கிம் சந்திர சட்டர்ஜி (அதில் இடம் பெற்ற பாடல்தான் வந்தே மாதரம்); 

கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு பக்கம் - இஸ்லாமிய மதமாற்ற முயற்சிகள் ஒரு பக்கம்- இந்த இரண்டுக்கும் ஈடுகொடுத்து இந்து மதத்தின் தொன்மையான விழுமியங்களைப் போற்றி வளர்த்து மீட்டு எடுத்த ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மஹான்கள்; அவரது அருந்தவச் சீடராய் உயர்ந்து அயல் மண்ணில் அமெரிக்க வரை சென்று இந்து மதத்தின் சிறப்புகளை உலகறிய உரைத்த சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் புரட்சியாளர்கள்! ஒரு இந்து கடல் கடந்து போகக் கூடாது என்ற பழமைத் திரையைக் கிழித்து, பார் முழுதும் இந்து தர்மத்தின் பட்டொளியை வீசிப் பரப்பியதாலேயே விவேகானந்தரை மதப் புரட்சியாளர் என்கிறோம்!  

இன்னும் தேச விடுதலை வேள்விக்குத் தங்களையே ஆஹுதிப் பொருளாக்கிய சித்தரஞ்சன் தாஸ், குதி ராம் போஸ்... எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டில் சென்று படை திரட்டி வெள்ளையர் ஆட்சியில் இருந்து பாரதத்தை விடுவிக்க "இந்திய தேசிய ராணுவம்"- ஏற்படுத்தி அதை வழி நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...- போன்ற எண்ணற்ற அரசியல் - சமூக - கலாச்சாரப் புரட்சியாளர்களை உருவாக்கிய மாநிலம் வங்கம்!  

அநீதி கண்டு பொங்கும் குணம் ஒவ்வொரு வங்காளியின் ரத்தத்திலும் இயல்பாகவே ஓடுகிறது என்பார்கள்! வங்காளிக்கு சோற்றை விடப் புரட்சி முக்கியம் என்று நட்புரிமையுடன் கிண்டலாகவும் சொல்வது உண்டு!  

இந்தப் பின்னணியில்தான் 1967 ஆம் ஆண்டுத் தேர்தல்களைப் பார்க்க வேண்டும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பல குளறுபடிகளின் காரணாமாக நாடு முழுவதுமே - தமிழகம் உட்பட - காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அகற்றப் பட்டு எதிர்க் கட்சிகளிடம் வந்தன. ஜனசங்கம் டெல்லி, மற்றும் ராஜஸ்தான், உத்தப்பிரதேசம்,மத்திய பிரதேசம்... போன்ற பகுதிகளில் மட்டுமே வேர்பிடித்து இருந்த காலம் அது. 

காங்கிரசுக்கு மாற்று என்று இப்போது பாஜகவை சுட்டிக் காட்டுவது போல அன்று 1967 ல் நாடு முழுவதும் பரவலாக ஜனசங்கத்தை சுட்டிக் காட்ட முடியவில்லை. அந்த வெற்றிடத்தை - தமிழகத்தில் திமுக போல- நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இயக்கங்கள் கைப் பற்றின!  

அப்படித்தான் வங்கத்தில் அஜாய் முகர்ஜி என்பவர் தன்னுடைய "பங்களா காங்கிரஸ்" - என்ற கட்சியை  காங்கிரசில் இருந்து வெளியேறி தோற்றுவித்து இருந்தார். அவருடன் கூட்டணி அமைத்து - ஜுனியர் பார்ட்னர்களாக - அஜாய் முகர்ஜியை முதல்வர் என்று ஏற்றுக் கொண்டு, தங்கள் கட்சியின் ஜோதி பாசு துணை முதல்வர் என்ற ஏற்பாட்டுக்கு இசைந்து மார்க்சிஸ்டுக் கட்சி 1967ல் வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

 நாளடைவில் அஜாய் முகர்ஜிக்கும் குடைச்சல்கள் கொடுத்து அவரது ஆட்சிக்கும் சிக்கல்கள் உருவாக்கி அந்த 'பங்களா காங்கிரஸ்' கட்சியை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர். அப்போது அவர்களது தாய் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடித்துக் கொண்டு இருந்தது.  

பிறகு 1975 எமர்ஜென்சி! அதன் அடக்கு முறைகள்! தொடர்ந்து எமெர்ஜென்சி விலக்கிக் கொள்ளப் பட்டு 1977-ல் தேர்தல். நாடு முழுவதும் வீசிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் வங்கத்தில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது - காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளந்து தனிக் கட்சி ஆகிப் போன மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்ட் கட்சி எனப்படும் CPM ! 

மீண்டும் 1967 நிலைதான்- காங்கிரசுக்கு மாற்றாக அங்கே இந்துக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த ஜனசங்கம் அப்போது வங்கத்தில் வேர்கொள்ளாததால் அந்த வெற்றிடம் மார்க்சிஸ்டுகள் வசம் சென்றது. 

ஆனால்  வங்காள சமூகத்தின் ஒட்டுமொத்த பொது உணர்வு என்பது இந்து மத பக்தி சார்ந்தது. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற "பெரியார் திடல்" கம்யூனிட்டுகள் அங்கெ இல்லை., மேலே சிவப்பு சட்டையும், உள்ளே "கருப்பு" பனியனும், உள்ளத்தில் ஈவேரா உணர்வுகளும் கொண்ட தமிழ் நாட்டுப் "பெரியார் திடல்" கம்யூனிஸ்டுகள் அங்கே இல்லை!  

" I AM FIRST A BRAHMIN BY BIRTH : THEN A HINDU : THEN A COMMUNIST" - என்று மேற்கு வங்க மாநிலத்தில் போக்கு வரத்து அமைச்சராக இருந்த சுபாஷ் சக்கரவர்த்தி என்பவர் ஒரு முறை சொல்லப் போய் அது பெரும் விவாதமாயிற்று! ஆனால் என்ன? அதுதான் மேற்கு வங்காளத்தின் சமூக உணர்வு நிலை! கம்யூனிஸ்ட் கட்சியின் வேரடி அமைப்பான கட்சிக் கிளைகளில் இருந்து - உயர் மட்ட அமைப்பான பொலிட் பீரோ வரை சட்டர்ஜிக்கள், முகர்ஜிக்கள், பாசுகள்,போசுகள் சவுதிரிக்கள் ... இப்படிப் பலரும் நிறைந்து இருந்ததன் களம் சார்ந்த எதார்த்தம் அது! 

ஒரு ORTHODOX HINDU ஆகவும் இருந்து கொண்டு , கல்கத்தா "ஜெய் காளி மாதா"வுக்கு  தீபாராதனையும் காட்டிக் கொண்டு, தான் பணி புரியும் கேந்திரத்தில் கம்யூனிஸ்ட்  தொழிற்சங்கத்தில் "கட்சி நிதி"யும் வசூலிப்பான் அந்த எளிய வங்காளி! 


செங்கொடி முக்கியம் வங்காளிக்கு  - அதை விட கல்கத்தா காளி மாதா அதி முக்கியம்! மார்க்சியச் சூட்டில் அவனுடைய காளி மாதா பக்தியை உலர்ந்து போக அவன் அனுமதித்தது இல்லை! பஞ்சப்படிக்கும்,சம்பள உயர்வுக்கும் போராட கம்யூனிஸ்டு சங்கம் - ஆத்ம அமைதிக்கும், குடும்ப ஷேமத்துக்கும் காளிமாதா - அல்லது ராமகிருஷ்ண மடம் ! 


இப்படி இரட்டைத் தடத்தில் பயணித்த - சமூகத்தில் அடிப்படை நிலையில் இருந்த சாதாரண சராசரி வங்காளிகளை - சீண்டாத வரையில் கட்சி- ஆட்சி - சங்கம்- சந்தா - லெவி - எல்லாம் சகஜமாகப் போய்க் கொண்டு இருந்தது. 2004 ல் "மத வெறி சக்திகளை மத்தியில் ஆட்சியில் வர விடாமல் தடுக்க" - கம்யூனிஸ்டுகளின் அகராதியில் பாஜக வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க - மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசை ஆதரிக்கத் தொடங்கியது.மார்க்சிஸ்டுக் கட்சி! 

அப்போது தொடங்கியது வங்காள இந்துவின் விழிப்பு உணர்வு! "இந்தக் காங்கிரசை ஆதரிக்கக் கூடாது என்றுதானே தாய் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைப் பிளந்து CPM உருவாயிற்று? எமெர்ஜென்சியைக் கொண்டு வந்த காங்கிரசை எதிர்த்தது நாமும் சேர்ந்து தானே? எமெர்ஜென்சி காலத்தில் கொடுமைகளை அரங்கேற்றிய சித்தார்த்த சங்கர் ரே அரசை "அரைப் பாசிச அரசு" என்று வர்ணித்தவர்கள், அந்த அரசின் அடக்குமுறையில் அடியும் உதையும் பட்டவர்கள் நாம்தானே?"- சராசரி மார்க்சிஸ்டு அபிமானியான அடிப்படை சமூக வங்காளி கேள்வி கேட்டான்! 

இதில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது, மன்மோகன் சிங் அரசு 2005 ஆம் ஆண்டு கொண்டு வந்த "சச்சார் கமிட்டி" அறிக்கை! "STATUS OF MUSLIMS IN INDIA " - என்பதை ஆராய்ந்த ராஜிந்தர்  சச்சார் கமிட்டி அறிக்கை "இஸ்லாமியர்களின் ஏழ்மையை" விரிந்து உரைத்தது! அவ்வளவுதான்! கம்யூனிஸ்டுகள் அந்த அறிக்கையை தலை மீது சுமந்து கொண்டு ஆடினார்கள்! 

புத்திசாலியான வங்காளி கேள்வி கேட்டான்:- "கார்ல் மார்க்ஸ் கற்றுக் கொடுத்த வர்க்க பேதத்தை கட்சி இப்படித்தான் பார்க்கிறதா? அது என்ன இஸ்லாமிய ஏழ்மை? ஏழ்மையில் இந்து ஏழ்மை, இஸ்லாமிய ஏழ்மை என்றெல்லாம் தனித் தனியாக இருக்கிறதா? ஏழ்மையை ஒழிக்க வேண்டும் - ஏழைகளைக் காக்க வேண்டும்- நியாயம்- அது என்ன "இஸ்லாமிய ஏழ்மை" மட்டும் ஸ்பெஷல்? இந்த சங்கடமான கேள்விகளை கட்சித் தலைமை ரசிக்கவில்லை! 

அது மேலும் மேலும் இஸ்லாமியர்களின் அன்பையும், ஆதரவையும் சம்பாதிக்க இந்த "சச்சார் கமிட்டி" அறிக்கையைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடியது. "பார்த்தீர்களா, பார்த்தீர்களா ஐயோ பாவம் இந்த இஸ்லாமியர்களின் கல்வி, பெண்கல்வி, குடியிருப்பு உள்ளிட்ட வாழ்வியல் நிலைமைகள் எவ்வளவு மோசமாக உள்ளது பார்த்தீர்களா? ஐயோ பாவம் ஏழை இஸ்லாமியன்!"- கம்யூனிஸ்டு கட்சித் தலைமை அப்படியே இஸ்லாமிய ஆதரவை நாடி சச்சார் அறிக்கையை உயர்த்திப் பிடித்தது!  

இவர்களின் ஆட்டத்தை நன்கு வளரவிட்டு, ஒரு கட்டம் வரை வேடிக்கை பார்த்த பிறகு, மமதா பானர்ஜி, 2009 பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்! "அது சரி, 1977 ல் இருந்து இதோ 2009 வரை 32 வருடம் நீங்கள்தானே வங்கத்தை ஆண்டு வருகிறீர்கள் - அப்படியானால் இஸ்லாமிய ஏழ்மைக்கு நீங்களும்தானே பொறுப்பு?"- அன்று தகர்ந்து போன கம்யூனிஸ்டுகளின் இஸ்லாமிய வாக்கு வங்கி இன்று வரை மீளவே இல்லை! அதே நேரத்தில் சராசரி இந்துவும் தனது "செங்கொடி   அபிமானத்தில்" இருந்து விடுபட்டான்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் மம்தா! CPM கட்சியின் இந்து வாக்கு வங்கி , இஸ்லாமிய வாக்கு வங்கி இரண்டும் 2009 பாராளுமன்றம் மற்றும்  2011 சட்டமன்றத் தேர்தலில் தகர்ந்து போனது. 

ஆனால் 2011 ல் ஆட்சிக்கு வந்த மம்தாவின் அரசியல் பேயாட்டம் அதிகரித்து, தனக்கு உடன் படாதவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடப்பட்டன! மேலும் "சாரதா சிட் பண்ட்" ஊழலில் பல கோடிக்கணக்கான வங்காளிகளின் சேமிப்புகள் - அதில் மிகப் பலரும் இந்துக்கள் - கரைந்து காணாமல் போனது. அதில் திரிணமூல் கட்சியினரின் தொடர்புகள் குறித்த பல விஷயங்கள் வெளிவரத் தொடங்கின! இஸ்லாமியர்களுக்கும் பணம் கரைந்து போனதால் வாழ்க்கை சிக்கல் ஆயிற்று - என்னதான் "இஸ்லாமிய ஏழைகளாக " அவர்கள் மார்க்சிஸ்டுகளால் செல்லம் கொஞ்சப் பட்டாலும் சச்சார் அறிக்கையா சோறு போடும்?  

அங்கே சராசரி அடிப்படை சமூக வங்காளிக்கு - அதில் மிகப் பல இந்துக்களுக்கு - வாராது வந்து உதித்த மாமணி போல் அமைந்தது 2014 ல் அமைந்த மோடியின் ஆட்சி - அதன் பலத்தில் மேற்கு வங்கத்தில் கிளை பரப்பிய பாஜகவின் செல்வாக்கு! CPM ஏற்கனவே நம்பி ஆனால் கைவிடப்பட்ட கட்சி! "இஸ்லாமிய ஏழ்மை" - என்று தனியாக பொருளாதாரத்தை போதிக்கின்ற கட்சி! மம்தா கட்சியோ சாரதா சிட் பண்டு ஊழல் புகாரில்  முங்கித் தோய்ந்து சாக்கடை நீரை உடலில் பூசிக் கொண்ட கட்சி! 

அப்படியானால் எதுதான் மாற்று? புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த கணமே தீவிரவாதிகள் மறைவிடம் மீது தாக்குதல் நடத்தி அழித்த மோடி அரசா? அல்லது சூரியக் கதிர் தாக்குதல் என்பதையே சந்தேகப் பட்ட CPM , மம்தா வகையறாக்களா? 

ஏற்கனவே CPM மற்றும் மம்தா கட்சி, ஆகியவற்றின் மீது ஏற்பட்டு இருந்த ஆழமான ஏமாற்ற உணர்வு, பாஜக மீது கொண்ட மாபெரும் நம்பிக்கையாக - இதுதான் மாற்று, இது ஒன்றுதான் மாற்று- என்ற மாபெரும் ஆதரவாகப் பரிணமித்தது! 

இதுதான் கம்யூனிஸ்ட் கரைந்து காவியான கதை!

≠================+===++===+++++==

இதுமாதிரி திராவிட விஷங்களின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் நாள் எந்நாளோ ?  Fb post fwd

Comments

Popular posts from this blog

How to check your name in draft Tamilnadu electrol roll 2026?

Why Practicing Brahmins Traditionally Avoid Keeping Dogs as Pets

𝐓𝐡𝐞 𝐒𝐚𝐜𝐫𝐞𝐝 𝐕𝐚𝐤𝐮𝐥𝐚 𝐌𝐚𝐭𝐡𝐚 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞, 𝐏𝐞𝐫𝐮𝐫𝐮 Temple History