திருமாவளவனின் திருவிளையாடல்

 தூய்மை பணியாளர்கள் கடந்த மாதம் முதல் ஆக.13 வரை ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரியும் மற்றும் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

தூய்மை பணியாளர்கள் தற்பொழுது வரை 25 ஆயிரம் மாத வருமானம் பெறுகிறார்கள். தற்பொழுது இந்தத் தூய்மை பணியை தனியாருக்கு தாரை பார்ப்பதால் அவர்களது வருமானம் 15,000 ஆக குறைகிறது.

மேற்சொன்ன கோரிக்கையை வலியுறுத்தி தான் ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்களை பல தனியார் அமைப்புகள் சந்தித்து அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த போராட்டம் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் ஒரு திமுக ஆதரவாளரை வழக்கு போட செய்தனர்.அதாவது இந்த போராட்டம் நடத்துவதால் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று ரயில் பயணம் செய்வதற்கு இடையூறாக இருக்கிறது என்று அந்த திமுக ஆதரவாளர் வழக்கு பதிந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு அந்தப் போராட்டம் இடையூறு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று வர, எனவே ஆக.13 முதல்வர் ஸ்டாலின் கூலி திரைப்படம் பார்த்து முடித்து விட்ட பிறகு அன்று இரவே தூய்மை பணியாளர்களை ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் காவல்துறையினர்.

இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் பாதுகாவலர் என்று சொல்லப்படும் திருமாவளவனும் அமைதி காத்தனர்.

அரசு வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு தூய்மைப் பணியாளர்களால் வேறு ஏதும் செய்ய முடியாமல் அந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊதியத்திற்கே தங்கள் பணியை செய்ய துவங்கி விட்டனர்.

இதில் திருமாவளவன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அதுக்கு ஒரு படி மேலே சென்று இந்த தூய்மை பணியை நிரந்தர படுத்த கூடாது என்று வேறு கருத்து தெரிவித்தார்.

அவர் கருத்து என்னவென்றால் இந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர படுத்தினால் அவர்கள் சமூகத்தில் வேறு எந்த உயரிய பதவிக்கும் செல்ல முடியாமல் அவர்கள் தலைமுறை இதே பணியை செய்யத் தொடங்கி விடுவார்கள் என்றார்.

ஆனால் உண்மையில் ஊதியத்தை குறைக்காமல் பணி நிரந்தரத்துடன் வேலை செய்தால்தான் அந்தத் தூய்மை பணியாளர்கள் தங்கள் அடுத்த தலைமுறை வேறு உயரிய பணிக்கு அனுப்பி வைக்க முடியும். இதுதான் எதார்த்த உண்மை. இந்தக் கருத்தை வேறு வழியில்லாமல் கம்யூனிஸ்ட கட்சிகளும் வலியுறுத்தின.

தாழ்த்தப்பட்டவர்கள் திருமாவளவனை ஒரு ஒரு கடவுளின் அவதாரமாக பார்க்கின்றனர். ஆனால் அவர் திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்க இது போன்று தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு பணி நிரந்தரத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்.

கூட்டணி நிர்பந்தம் அவர் கொண்டுள்ள கொள்கைக்கு எதிராக முடிந்து அவரே வேறுவிதமான திருவிளையாடல் செய்ய வைப்பது வேதனையான விஷயம்.

Comments

Popular posts from this blog

How to check your name in draft Tamilnadu electrol roll 2026?

Why Practicing Brahmins Traditionally Avoid Keeping Dogs as Pets

𝐓𝐡𝐞 𝐒𝐚𝐜𝐫𝐞𝐝 𝐕𝐚𝐤𝐮𝐥𝐚 𝐌𝐚𝐭𝐡𝐚 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞, 𝐏𝐞𝐫𝐮𝐫𝐮 Temple History